அரசு ஆசிரியர்களின் சொத்துக்களை கணக்கெடுக்க கோர்ட் உத்தரவு

652

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கல்வித் துறையில் ஊழல் அதிகரித்து விட்டதாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்,  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர் குறித்து  அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அதில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY