குரு குடும்ப விவகாரத்தில் ராமதாஸ் தலையிடலனா..? பதறும் உறவுகள்

0
141

கடந்த ஒரு மாதகாலமாக மறைந்த காடுவெட்டி குருவின் குடும்ப விவகாரம் மீடியாக்களின் தலைப்பு செய்திகளாகி வருகிறது. உண்மை என்னதான் என காடுவெட்டி குருவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியவை: குரு சாவுக்கு பிறகு அவரது மனைவி லதா திண்டிவனம் பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். காரணம் கேட்டதற்கு குருவின் அம்மா, அக்கா, தங்கைகளால் எனக்கு ஆபத்து என கூறினார். இந்தநிலையில் கம்போடியாவில் நடந்த உலக சத்திரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதில் கலந்து கொள்ள வைக்க குருவின் மகன் கனல் அரசனை அழைத்துச் செல்ல அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீரனின் மருமகனுமான சீனிவாச ராவ் ஏற்பாடு செய்திருந்தார். ( இவர் வேறு யாருமல்ல பசுமை தாயகத்தை முதலில் ஆரம்பித்து உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்) 

இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கு கனல் மைனர் என்பதால் அவரது தாய் லதாவிடம் கையெழுத்து வாங்குவதற்கு சென்றார். ஆனால் லதாவின் உறவினர்கள் கனல் அரசனை பார்க்க விடாமல் துரத்தி அடித்தனர். அதன் பின்னர்தான் கனல் அரசன் வீடியோவாக தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். தற்பொழுது மனோஜ்-விருத்தாம்பிகை திருமணத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதே குருவின் ஆசை. இது உறவினர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தான் எப்படியாவது கடத்திக் கொண்டு சென்று முன்னாள் எம்எல்ஏ தன்ராஜ் மகனுக்கு விருத்தாம்பிகையை திருமணம் செய்து வைக்க லதா மற்றும் உறவினர்கள் திட்டமிட்டனர். இதனை தெரிந்து கொண்ட கனல் அரசன் உள்ளிட்டோர் கடந்த 28 11 2018 புதன்கிழமை அன்று கும்பகோணத்தில் விருத்தாம்பிகைக்கும் மனோஜுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று லதா எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். நாம் போட்ட திட்டம் தவிடு பொடியாகி விட்டதை எண்ணி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து… 29 11 2018 வியாழக்கிழமை அன்று தீபாவளிக்கு அப்பாவுக்கு படைக்கவேண்டும் வா அம்மா என்று கனல் அழைத்த போது கூட வராத லதா யார் சொன்னவுடன், உறவினர் என்று பெரும் கூட்டம் புடைசூழ காடுவெட்டி வந்து கண்ணீர் கம்பலையுமாக மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார்?. சரி அப்போது அவரிடம் கேட்டபொழுது டாக்டர் ஐயா தான் எனக்கு மருத்துவ உதவிகளை செய்தார் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் கனல்அரசன் ஏற்கனவே தன் தாயை அவரது உறவினர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னதை இதன் மூலம் உண்மை என்று உலகிற்கு லதாவே உணர்த்தியிருக்கிறார். காடுவெட்டி குருவின் சொத்துக்களை அபகரிப்பதற்காக எனது மகளை அந்த கும்பல் திருமணம் செய்து கொண்டது என்பது லதா கூறுவது உண்மையானால் குருவின் இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளையாவது லதாவுடன் இருந்திருக்க வேண்டும் இல்லை தானே? தற்பொழுது காடுவெட்டி குரு மகளும் மருமகனும், குருவின் மகன் கனல் அரசனும், கும்பகோணம் காவல் நிலையத்தில் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். குருவின் தாய் கல்யாணி அம்மாளையும் 29 11 2018 வெளியேற்றிவிட்டு உடனிருந்த குருவின் தங்கையும் வெளியேற்றிவிட்ட ஒரு கும்பல் குருவின் மனைவி லதாவை அந்த வீட்டில் அமரவைத்து வைத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஏழு பேர் ஒருபுறமும் ஒருவர் மட்டும் தனியாக இருப்பதை வைத்தே அந்த குடும்பத்தில் என்னநடக்கிறது என்பதனை புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் வருத்தத்துடன். இந்த விவகாரத்தில் ராமதாஸ் உறவினர் என்பதாலோ என்னவோ லதா பக்கம் இருப்பதால் வைத்தியும் அந்த பக்கம் இருக்கிறார். அவர் தலையிட்டு தான் பிரச்சனை முடியும்.இல்லை என்றால் கண்டிப்பாககொலை தான் முடியும் என்கின்றனர் பதற்றத்துடன்.

LEAVE A REPLY