சீனாவின் பியூஜியன் மாகாணத்தில் உள்ள சியாமென் பல்கலை.யில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  மருத்துவமனையில் முதலில் அவருக்கு எக்மோ  சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முன்னேற்றமும் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இந்த ஆபரஷேனின்போது  இதய துடிப்பு இருக்கக் கூடாது என்பதால் இதயத்தில் உள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சை செய்தனர். இவ்வாறு கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் இதய குழாய் இணைக்கப்பட்டது. தற்போது அந்த பெண் நலமாக இருக்கிறார். 72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்திவைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY