மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

73
அழகானது அமைதி. அமைதியாகவே உலகில் பல புரட்சிகள், சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அமைதியை மனம் விரும்புகிறது, அனுபவிக்கிறது. ஆனந்தமடைகிறது. அமைதி அழகானது. ஆழமானது. தெய்வீகமானது. எல்லோருக்கும் தேவையானது. அமைதியாக நாம் இருக்க விரும்புவதைப் போல அடுத்தவர்க்கும் அதை நாம் அளித்து மகிழவேண்டும். மறுபரிசாக அவர்களும் அமைதியைத் தருவார்கள்.
 

சீனாவில் ‘அமைதி’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. அமைதியான நதி, ஆள் அரவமில்லாத பூங்கா, சலனமில்லாத குளம், சந்தடியில்லாத சாலை என்று பல்வேறு ஓவியங்கள் போட்டிக்கு வந்திருந்தன. ஆனால் போட்டியை அறிவித்த அரசன் இடிமின்னல், புயல், கடுமையான மழை, மரங்களின் பேயாட்டம், கடலின் சீற்றம், காட்டு விலங்குகளின் கூக்குரல், தலைதெறிக்க ஓடும் மக்கள் என்று வரைந்த ஓவியத்தைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கிறார். “அரசே இதுவா அமைதி?” என்று அமைச்சர் கேட்க “அமைச்சரே! ஓவியத்தைச் சற்று உற்றுப்பாருங்கள். பதட்டமான இந்தச் சூழலிலும் அமைதியாக ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த பரிசுக்கு உரியது என்றான். எத்தகைய சூழலிலும் நமது கடமையிலிருந்து தவறாமலும், பதட்டப்படாமலும் இருக்க மனதை பழக்க வேண்டும். மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

LEAVE A REPLY