மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…

80

யாராவது நம்மைப் பார்த்துச் சோம்பேறி என்று திட்டினால், அந்த வார்த்தையை நாம் நம்முடையது என்று ஏற்றுக் கொள்ளும் போதுதான் நாம் பாதிக்கப்படுகிறோம்.  சோம்பேறி என்று யாராவது நம்மை திட்டினால் சோம்பேறி என்ற வார்த்தையால் ஏற்படும் அவமானத்தைவிட நாம் சோம்பேறி என்பது உண்மைதான். இந்த உண்மை மாற்றானுக்கும் தெரிந்துவிட்டதே, என்று நினைக்கும் போதுதான் பாதிக்கப்படுகிறார், பதிலுக்குக் கோபப்படுகிறார், அவர் இரத்த அழுத்தம் கூடுகிறது.  கண்கள் சிவக்கின்றன.

நாம் சோம்பேறி கிடையாது என்று நமக்குத் தெளிவாகவும், உறுதியாகவும் நன்கு தெரிந்தால், எதிராளி நம்மைப் பார்த்துச் சொன்ன சோம்பேறி என்ற வார்த்தை வெறும் பிதற்றல். பிதற்றல் ஒரு போதும் நம்மைப் பாதிக்காது  இன்னும் கேட்டால் பிதற்றுகிறவனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ள மாட்டோம். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

LEAVE A REPLY