மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…

151

பேசுவதற்கு முன்னால் சிந்திப்பது சிறந்தது. அவசரத்தில் கொட்டிவிடும் வார்த்தைகளை அள்ளுவது முடியாத காரியம். காலம் முழுவதும் நம்மை வருந்த வைத்துவிடும் ஆற்றல் நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு உண்டு. எனவே பேசுவதற்கு முன்னர் நமது சொல் மற்றவர்களை என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வேலைகளுக்கு இடையே சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிட ஓய்வே மன அமைதிக்கு வழிதரும். பிரச்னைகளுக்கும் முடிவுக்கும் இடையேயான காலத்தை முடிந்தளவு அதிகரிக்கவும். போதிய இடைவெளி எல்லா வேலைகளுக்கும் அவசியம். ஒரே நோக்கில் மனது செயல்படும்போது சோர்வடையலாம். இதன் தொடர்ச்சியாக கோபம் வெளிப்படும். மூன்றாம் நபராய் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை தூரத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இதில் சம்பந்தப்படாத வேறொருவர் அதனை எப்படி அணுகுவார் என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்தால் ஏற்படும் பதற்றம் கூட கோபமாய் மாறலாம்.  சக ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் போதிய வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்வது சிறந்தது. ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் நல்ல ஆரோக்கிய மன நிலையை தரும். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY