மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…

171

உடலுக்கும் மனதிற்குமான தொடர்பு மிக முக்கியமானது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல் மூலம் மன அமைதி கைகூடும்.  இதற்கு பெரியோர்கள் பல வழிகளை காட்டுகின்றனர். மனக் கசப்புகளை மறக்கப் பழகுங்கள். மோசமான விளைவுகளைப்பற்றி தொடர்ந்து சிந்திப்பதை நிறுத்துங்கள் என்கின்றனர். மோசமான நினைவுகளிலிருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? என்பது பற்றி மட்டும் சிந்திக்க சொல்கின்றனர். இதன் மூலம் தீர்வுகளை நோக்கி நகரலாம். செய்த தவறுகளைப் பற்றிச் சிந்திக்காமல் அதற்கு உண்டான தீர்வுகளைச் சிந்திப்பதில் ஆர்வம் காட்ட அறிவுறுத்துகின்றனர்.

வயதில் மூத்தவர்களையும், அனுபவம் வாய்ந்தவர்களையும் அருகே வைத்துக் கொள்ளுதல் பயன் அளிக்கும். அடுத்து மனம் விட்டு சிரியுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாமருந்து சிரிப்பு மட்டுமே. தினமும் உடற்பயிற்சி போலவே சிரிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட மறக்க வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் இரவு உறக்கத்தை தவிர்க்க கூடாது. தூக்கமின்மை உடற்சோர்வையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY