மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…

251

நமக்கு ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகளை தீர்க்க கடவுளை நாடுகிறோம். பிரார்த்தனை செய்து காணிக்கை தருவதாக வேண்டிக் கொள்கிறோம். ஆனால் அந்த காணிக்கையை செய்ய முடியாமல் போகும் நிலையில் அல்லது தள்ளிப்போகும் நிலையில் மனம் பெரும் தவிப்புக்குள்ளாகிறது.

அதைக் கொடு… இதைக் கொடு“ என்று ஆண்டவன் நம்மிடம் கேட்பதில்லை. நாம்தான் ஆண்டவனிடம் பிரார்த்தனை என்ற பெயரால் “எனக்கு அதைக் கொடு… நான் உனக்கு இதைக் கொடுக்கிறேன்“ என்று நச்சரிக்கிறோம். “நீ எனக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால், உன் உண்டியலில் இரண்டாயிரம் ரூபாய் போடுகிறேன்,“ என்று ஆண்டவனிடம் கமிஷன் பிசினஸ் பேசுகிறோம்! பிரார்த்தனை, சடங்குகள் இவற்றின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல், அவற்றில் போய்ச் சிக்கிக் கொள்ளுவதற்குப் பெயர் வேண்டுதல் இல்லை ! பிரார்த்தனை என்பது, நம்மை நாமே முழுமையாக உணர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது.  இயலாதவர்களுக்கு கொடுங்கள், அது இறைவனுக்கு செய்வதற்கு ஒப்பானது என்று ஆன்மிகவாதிகள் வலியுறுத்துகின்றனர். இதைக்கண்டு இறைவன் மகிழ்வான் என்கின்றனர். மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY