மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…

97

எனக்கு வாழ்க்கை முழுக்கவே போராட்டம்தான் என்பவர்களுக்கு பெரியோர் காட்டும் வழி குறித்து காண்போம். வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை! அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம்!. ஒவ்வொரு பிரச்னையும் நமக்குக் கிடைக்கிற ஒரு வாய்ப்புதான். யோகி ஒருவர் காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். தூரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர் அவரை ‘நிற்க சொல்லி ஓடிவந்தனர். அவர்கள் கூறியது,

‘அந்தக் காட்டில் ஒரு ராட்சஸி இருக்கிறாள். அவள் மனிதர்களை சாப்பிட்டுவிட்டு, அவர்களின் வலது கை கட்டை விரலை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வாள். இதுவரை 999 கட்டை விரல்களை சேகரிதிருக்கிறாள்.1000 ஆவது கட்டை விரலுக்காக காத்திருக்கிறாள் காட்டுக்குள் போகாதீர்கள் என்று எச்சரித்தனர். அதற்கு யோகி உங்களுக்கு நன்மை செய்ய இதைவிட நல்ல வாய்ப்பு எனக்கு எங்கே கிடைக்கும் என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு ஆலமர பெரிய கிளையை உடைத்துக் கொண்டு புழுதி கிளப்பியபடி யோகி எதிரில் வந்து நின்றாள் ராட்சஸி. ஆனால் யோகி பயந்து ஓடவில்லை.

‘என்னைக் கொல்வதன் மூலம் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்றால் என்னைத் தாராளமாகக் கொல்லலாம். ஆனால், ஒரு விஷயம் ஆலமரத்தின் கிளையை உடைக்க உனக்குச் சக்தி இருக்கிறதே தவிர, நீ என்னதான் முயன்றாலும் உன்னால் அந்தக் கிளையை மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க முடியாது! அழிப்பது சுலபம்! ஆக்குவது சிரமம்! என்று பேசத் துவங்கினார். அவர் சொன்ன வார்த்தைகளைவிட அவரது குரலில் இருந்த உண்மை, கரிசனம் ராட்சஸியைச் சரண் அடையச் செய்து, அவரின் சீடராகவே மாறினாளாம். இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி, யோகிக்கு ராட்சஸி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. ஊர் மக்களைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், சிலருக்கு சின்ன விஷயங்கள் பூதாகரமான பிரச்னையாக தெரியும். மனசே, ரிலாக்ஸ்!

LEAVE A REPLY