அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்பது குறித்து விவேகானந்தர் இப்படி கூறுகிறார்!

நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. நமக்கு நாமே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல. நம்மைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், மற்றவர்களுடைய நன்மையைக் குறித்து சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும். அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடைய முடியாத உயர்ந்த இடத்திற்கு நல்ல மனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும். உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்புகிறது. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

LEAVE A REPLY