சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருப்பதாவது; வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றுச் சூழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. இதன்படி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யலாம். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ மழையும், கடலூர் 13 செ.மீ, அரியலூரில் 12 செ.மீ, திருவண்ணாமலை போலூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

இதற்கிடையே, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வேலூரில் கடந்த 100 ஆண்டுக்கு முன், 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தொடர்ந்து 24 மணி நேரத்தில் 106 மி.மீ மழை பெய்தது. இந்நிலையில் நேற்று (ஆக-16) வேலூரில் நேற்று 166 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் வேலூரில் பெய்த அதிகபட்ச மழை என்று தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY