சித்திரகுப்தனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?

0
40
ஒருமுறை பார்வதி தேவி தன் திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள். அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும்” என்று கூறி தன் மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல்படும்படி செய்து உயிர் கொடுத்தார்.  பார்வதி தேவி, மகிழ்ச்சியடைந்து அந்த குழந்தைக்கு ‘சித்திர குப்தன்’ என்று பெயர் வைத்தாள்.
 
இந்நிலையில் யமதர்ம ராஜாவுக்கு சில கவலைகள் இருந்தன. அதாவது  இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்று சிவனும், விஷ்ணு பகவானும் கட்டளையிட்டிருந்தனர். ஆனால் யார் எவ்வளவு பாவ, புண்ணியங்கள் செய்தார்கள் என்ற கணக்கு தெரியாததால் கவலையடைந்திருந்தார்.
இந்த  தனது மனக்கவலையை பிரம்மாவிடம் சென்று சொன்னார் யமதர்ம ராஜா. பிரம்மா யமதர்மரிடம், சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான  சித்ர குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியம் செய்கிறார்கள் என்பதை கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி  பணி செய் என்று ஆலோசனை வழங்கி சித்திரகுப்தனை யம லோகத்தில் பதவியில் அமர்த்தினார்.

LEAVE A REPLY