வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்து அதிக அளவில் கொண்டிருக்கிறது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் பருக நெஞ்சுவலி குணமாகும்.
 
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம்.  கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச்  சாப்பிட்டால், பித்தத்தால் வரும் மயக்கம் சரியாகும்.
 
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
 
 கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
 
வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டு வர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
 
வெந்தயக் கீரை சாப்பிடுவதால் மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை குணமடையும்.
 

LEAVE A REPLY