இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடியதை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட் இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேர்  41 ரன்களுக்குள்  ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இது குறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது, ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் கூக்கபுர்ரா வகை பந்து கிட்டத்தட்ட 12 ஓவர்கள் வரை மட்டுமே ஸ்விங் ஆகும். அது வரை பொறுமையாக இருந்து விட்டு பின்னர் அடித்து ஆடி இருக்கலாம்.

ஆனால், உடனே ரன் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்விங் ஆன பந்துகளை அடித்து கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர் . இது போன்ற விஷயங்களை புதிய வீரர்கள் செய்தால் ஏற்கலாம். ஆனால், அந்த ஷாட்களை ஆடியது எல்லாமே அனுபவ வீரர்கள் என்பதை ஏற்க முடியவில்லை.

ஒருவேளை, போட்டிக்கு முன் திட்டமிடும் போது இன்று அடித்து ஆட வேண்டும் என்ற முடிவை எடுத்து இருந்தால், அது நிச்சயம் தவறான முடிவு. மற்ற வீரர்கள் வெளியேறி கொண்டிருந்த போதும் புஜாரா நிலைத்து நின்று ஆடினார். மற்ற வீரர்களும் அவரைப்போல  பொறுப்பாக, எல்லை உணர்ந்து, அதிரடியாக எதையும் முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY