இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்து வருகிறது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. ஷமி மற்றும் பும்ரா களத்தில் நின்றனர். இந்நிலையில் 2ம் நாளான இன்று ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி அவுட்டாக பழைய 250 ரன்னுடன் இந்தியா முதல் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆடியது. அந்த அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இஷாந்த் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் ஆரோன் பின்ச் போல்டாகி வெளியேறினார். மேலும் அந்த அணிக்கு அதிர்ச்சி தொடர்ந்தது. அஸ்வினின் அபார பந்து வீச்சில் ஹாரிஸ் 26, கவாஜா 28, மாரிஸ்2 ரன்னுக்கு நடையை கட்டினர். இதையடுத்து சற்று தாக்குப் பிடித்திருந்த ஹாண்ட்கோம்ப்பும் 34 ரன்னில் பூம்ரா பந்திலும், பெயின் 5ரன்னில் இஷாந்த் பந்திலும் வெளியேற ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. 65 ஓவரில் 137 ரன்னுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

 

LEAVE A REPLY