அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் ட்ரம்ப் அதிபரானபின்  முறிந்தது. இதையடுத்து அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. ஈரானிடம் எந்த நாடும் எண்ணெய் வாங்க கூடாது என்று மிரட்டி வருகிறது. ஆனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஈரானுடனான பொருளாதாரப் பரிவர்த்தனையைக் குறைத்து விட  வேண்டும் என்றது. 

இந்நிலையில் இந்த மிரட்டலை பொருட்படுத்தாத இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்கு பதில் இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அதில் பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித் தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்தும்.

ஏற்றுமதி  பொருட்களில் பெருமளவு உணவுப் பொருட்கள், தானியங்கள், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களாக இருக்கும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம்  இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைவதை தடுக்க முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY