கோஷ்டி பண்ணுற நேரமா இது.. திருச்சி ஆட்களை விரட்டிய அமைச்சர் தங்கமணி

304

திருச்சி மாநகரில் உள்ள சிந்தாமணி மற்றும் அமராவதி கூட்டுறவு சங்கத்திற்கு புதிய தலைவர்கள் வந்துருக்காங்க. இந்த போஸ்டிங்கில எப்படியும் தன்னுடைய ஆட்களை போடணுமுனு திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர முயற்சி செய்தார். ஆனா மாவட்ட செயலாளரும் எம்பியுமான குமார் பரிந்துரையின் பேரில் இரண்டு பேர்  நியமிக்கப்பட்டு விட்டனர்.  ஏற்கனவே முதல்வருக்கு ரொம்ப நெருக்கமானவருனு சொல்லிக்கிட்டு இருக்குற புதிய ஆவின் சேர்மன் கார்த்திகேயனும் இது சம்மந்தமா அமைச்சர் கிட்ட பேசியிருக்கார்.

அவங்க இரண்டு பேரும் நேத்திக்கு மாநகரில் உள்ள தங்களுடைய ஆதரவு பகுதி செயலாளர், வட்ட செயலாளருனு 22 பேர ரெடி பண்ணி முதல்வர பார்க்க சென்னைக்கு அனுப்பியிருக்காங்க. சென்னைக்கு போன கோஷ்டி முதல்வர பார்க்கணுமுனு கேட்டிருக்காங்க, ஏன்னு? ஆபிசுல கேட்டிருக்காங்க அவங்க சொன்ன பதில்ல கேட்ட சிஎம் ஆபிசுல உங்கள போய் அமைச்சர் தங்கமணிய பார்க்க சொல்லிட்டார் சிஎம்முனு சொல்லியிருக்காங்க. உடனே எல்லாரும் வேலுமணிய போய் பார்த்து இருக்காங்க.. கோஷ்டி அரசியல் பண்ணுற  நேரமா இது போங்கய்யா.. போய் வேலைய பாருங்க.. னு சொல்லி அனுப்பிட்டாராம். இதுல வேடிக்கை என்னான்னா போன ஆட்கள் ஒவ்வொருத்தருக்கும் 1 லட்சம் பரிசாம். 

LEAVE A REPLY