பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சாமியார் ராம் ரஹீம். டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர். இவர் பெண்களை பாலியல் பலாத்தாரம் செய்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் ராம்சந்தர் சத்ரபதி 2002ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து 2003ஆம் ஆண்டு ராம் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ல் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. தற்போது அவர் ஒரு பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஹீம் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. தண்டனை வரும் ஜனவரி 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என ஹரியாணா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வழக்கில் குற்றவாளி என்று 2017 ஆகஸ்ட்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY