சிவகங்கையில் ‘ ஜூனியர்’ அலப்பற தாங்க முடியல.. காங்கிரசார் புலம்பல்

93

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு தமிழகத்தில் 9ம் புதுச்சேரியில் 1ம் என 10 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரசுக்கான தொகுதிகள் என்னென்ன? என்பது குறித்து இதுவரையில் முடிவாக இல்லை என்றாலும் ஆங்காங்கே காங்கிரசுக்கு இது காங்கிரசுக்கு அது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக விருதுநகர், தேனி, ஈரோடு, சிவகங்கை, திருச்சி ஆகியவை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி கூறப்பட்டாலும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பதால் வேட்பாளர்கள் என கூறப்படும் ஆட்கள் யாரும் வாயை திறக்கவில்லை.

ஆனால் சிவகங்கையில் மட்டும் முற்றிலும் நிலை வேறாக உள்ளது என்கின்றனர் காங்கிரசார். காரணம் சிவகங்கை எனக்கு தான்.. வேட்பாளர்  நான் தான் என சிதம்பரத்தின் மகன்  கார்த்திக் சிதம்பரம்  செய்யும் அலப்பறை தாங்க முடியல என்கின்றனர் அவர்கள். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக சம்மந்தப்பட்ட தொகுதிகளின்  விஐபிகளை சந்திக்க 50 கார்களில் ஜூனியர் சிதம்பரம் செய்யும் அலப்பறை முகம் சுழிக்க வைப்பதாக காங்கிரசார்  கூறுகின்றனர். அப்படியாக திருமயம் திமுக எம்எல்வுமான ரகுபதி, சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் பெரியகருப்பன்  ஆகியோரை சந்தித்து ஜூனியர் சால்வை போட்டது திமுகவினருக்கே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம் காங்கிரசில் சோனியா, ராகுல் கூட தொகுதிகளின் வேட்பாளர்களாக வலம்  வரவில்லை.. ஜூனியர் மட்டும் ஏன் இப்படி என்று  கேட்டால்..அப்பா கொடுக்குற இடம் தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.. 

LEAVE A REPLY