கள்ளக்காதலை கண்டித்த தாய் எரித்துக்கொலை. நடித்த சென்னை பெண் சிக்கினார்

169
சென்னை தாம்பரம் சானிடோரியத்தைச்  சேர்ந்த பெண் பூபதி (60). இவரது கணவன் கண்ணன். மகள் நந்தினி (26). இந்நிலையில் கடந்த 7 ம் தேதி மதியம் வீட்டு வேலைக்கு போய்விட்டு வந்து பூபதி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் உடலில் தீப்பற்றி பலத்த காயமடைந்தார். இதையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அன்றுமாலையே உயிரிழந்தார். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது  நந்தினி மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நந்தினிக்கும்,  திருநீர்மலையை சேர்ந்த  முருகன்(46)  என்பவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. இதை தாய் பூபதி  கண்டித்திருக்கிறார். இதனால் முருகனுடன் ஆலோசனை நடத்திய நந்தினி தாய் தூங்கியபோது மண்ணெண்ணெய்யை அவர் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.
தாயை மீட்பது போல நடித்து கதறி அழுதது தெரிய வந்தது. இதையடுத்து நந்தினியும் முருகனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY