வாதநோய் போக்கும் கண்டங்கத்திரி!

84
வாத நோய் நீங்க கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து பூச வேண்டும். இதனால் தலைவலி,  கீல்வாதமும் போகும்.
 
கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும்.

கண்டங்கத்திரி காயை  சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன்  பழம் சிறந்த மருந்தாகும். 

கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு  பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குஷ்டம் உள்ள இடங்களில்  பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.
 
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு  வேளை கொடுக்கலாம்.
 
பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். 
 

Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY