கருணாஸ்… புல் சரண்டர்

183

 அதிமுக அரசுக்கே எனது முழு ஆதரவு என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த 8-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டசபையில் கருணாஸ் பேசியதாவது: ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறிய அரசுக்கு நன்றி.  அதிமுக அரசு 5 ஆண்டுகளும் தொடர வேண்டும் என்பதே எனது ஆசை. எனவே அதிமுகவுக்கு எனது முழு ஆதரவு தொடரும். இது ஜெயலலிதா அமைத்த ஆட்சியாகும் என்றார்.  அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மணிகண்டன், கல்லூரி அமையவுள்ள இடம் கருணாஸ் தொகுதி அல்ல, எனது தொகுதி என்றார். உடனே கருணாஸ், எனது தொகுதிக்கு அரசு எதையும் செய்யவில்லை என ஒப்புக் கொண்ட அமைச்சருக்கு நன்றி என்றார்.

LEAVE A REPLY