கரூர் மாவட்ட அமமுக பொருளாளராக இருந்தவர் விஜிஎஸ் குமார். இன்று காலை 9 மணியளவில் விஜிஎஸ்  குமார் சேலத்தில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியின் போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உடன் இருந்தார். விஜிஎஸ் குமார் திமுகவில் ஐக்கியமான தகவல் அமமுகவினருக்கு காலை 12.30 மணியளவில்தான் தெரிந்தது. அதன் பின்னர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், கரூர் அமமுக மாவட்ட பொருளாளர் விஜிஎஸ் குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் நீக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். விஜிஎஸ் குமார் கட்சி மாறிய தகவல் தெரியாததால் அமமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். 

LEAVE A REPLY