GOபடிதான் கரூரில் பஸ் ஸ்டாண்ட்… அரசு செயலர் பிரமாண பத்திரம் தாக்கல்

360

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் அரசு நிர்ணயித்த இடத்தில் பஸ் நிலையம் கட்ட தடை இல்லை என்று உத்தரவிட்டது. ஆனால் இது குறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இது கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் 2 ஆண்டாக ஏன் பஸ் நிலையம் கட்டவில்லை என்றனர். அதைவிட சிறப்பான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார் ஹர்மந்தர் சிங்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,  அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து, , அரசு அதிகாரிகள் நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது. கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படிதான், புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கை இன்றைக்கு (11ம் தேதி) ஒத்திவைத்திருந்தனர். இதையடுத்து ஹர்மந்தர் சிங் நேரில் ஆஜராகி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

LEAVE A REPLY