தந்திரங்களை நிறுத்து…. ட்ரம்ப்க்கு கிம் எச்சரிக்கை!

54
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் கடந்த ஆண்டு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்தனர். இதில் அணு ஒழிப்பு தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹனோயில் நடந்த 2வது சந்திப்பும் தோல்வியடைந்தது.
 முக்கிய அணு ஆய்வு தளத்தை அழிப்பதற்கு பிரதிபலனாக, வடகொரியா மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் விலக்க வேண்டும் என்று வடகொரியா கோரியதால் சந்திப்பை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று  டிரம்ப் தெரிவித்திருந்தார்.
 

ஆனால் இதை வடகொரியா மறுத்தது. உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா உண்மையிலேயே விரும்புகிறதா என்பதில் கடைசி சந்திப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.

மேலும், சரியான அணுகுமுறையோடும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளோடும் 3வது உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்தினால், இன்னொரு முறை முயற்சிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
 எங்கள் மீது அதிகபட்ச அழுத்தங்களை திணித்தால் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று அமெரிக்கா தவறாக நம்பிக் கொண்டிருப்பதாகவும், விரோத பேச்சுவார்த்தைகள் மற்றும் தந்திரங்களை நிறுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  
 புதிய உச்ச மாநாடு பற்றிய எந்தவொரு துணிச்சலான முடிவை எடுக்கவும் இந்தாண்டு இறுதி வரை அமெரிக்காவுக்கு நேரமளிப்பதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY