நம்மில் சிலருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி போட்டு உடைத்து விடுவர். இது போன்ற ஆசாமிகளுக்காகவே ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு சென்று  விரும்பிய பொருட்களை உடைக்கலாம். இந்த கடை சீனாவின் பீஜிங் நகரில் ‘ஆங்கர் ரூம்’ (Anger room) என்ற பெயரில் செயல்படுகிறது. ஜின் மெங்க்(25) என்பவர் இதை நடத்தி வருகிறார். வியாபாரம் எப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டபோது, “பெரும்பாலும் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் வருகிறார்கள். மாதத்துக்கு சுமார் 600 பேர் வந்து 15,000 பாட்டில்களை உடைக்கிறார்கள். வன்முறையை வளர்ப்பது எங்கள் நோக்கமல்ல. அவர்களின் கோபத்தை தீர்த்து அமைதியாக்குவதே எங்கள் நோக்கம். என்றார்.”5rv1p3bo

க்யூ சியூ என்ற  வாடிக்கையாளரிடம் கேட்டபோது, 16 வயதாக இருக்கும் போது கண்ணாடி அணிந்து, பற்களில் க்ளிப் அணிந்திருப்பாராம். அப்போது சக மாணவர்கள் கேலி செய்ததால் அந்த பள்ளி மீது உள்ள கோபத்தை இங்கு வந்து தீர்த்துக் கொண்டேன். அவர் பொருட்களை உடைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். ஒரு பெண் தனது திருமண புகைப்படங்களை கொண்டு அடித்து உடைத்துள்ளார். சொந்த பொருட்களை கொண்டு வந்தும் உடைக்கலாம்,

லி சாவ் என்ற வாடிக்கையாளர் “இங்கு வந்த பிறகு நான் அமைதியை உணர்கிறேன்” என்றார். 3gu8g2

LEAVE A REPLY