தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியில் சேர வந்த இளம்பெண்ணை 4 இளைஞர்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் இளம்பெண் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கும்ப கோணம் வழக்கறிஞர்கள் யாரும் வழக்கில் ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நேற்று நீதிமன்ற பணிகளை வக்கீல்கள் புறக்கணித்தனர். இந்நிலையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரி நேற்று கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

LEAVE A REPLY