பட்டபகலில் திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை எரிக்க முயன்றவர் யார்?

263

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் ரம்யா (23). இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி காஜாமலை பகுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இன்று மதியம் ரம்யா அறையில் இருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ‘ ஏன் என்னுடன் பேசுவதில்லை என கேட்டு தகராறு  செய்திருக்கிறார். அப்போது அங்கிருந்த ரம்யாவின் தோழி ஒருவர் தகராறு முற்றுவதை பார்த்து பயந்து உதவிக்காக ஆட்களை கூப்பிட வெளியே ஓடினார்.

இந்த சமயத்தில்  அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கேனில் இருந்த பெட்ரோலை ரம்யா மீது ஊற்றி தீவைத்து விட்டு ஓட்டம் பிடித்தார். உடலில் தீ பரவ தொடங்கியதும் ரம்யா சாமர்த்தியமாக வீட்டிற்குள் ஓடிப்போய் பாத்ரூமின் ஷவரை திறந்து தீயை அணைத்தார். இந்த சம்பவத்தில் ரம்யாவிற்கு கழுத்து, மார்பு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ரம்யாவை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர் காரைக்காலைச் சேர்ந்த தவச்செல்வன் என்று தெரிய வந்துள்ளது. அவர் என்ன செய்கிறார்? ரம்யாவுடன் எப்படி பழக்கம்  ஏற்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.  போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

LEAVE A REPLY