வடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்!

273

சங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி 2 ’. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் கொடுத்தது. படக்குழுவினரோடு ஏற்பட்ட பிரச்சினையால், வடிவேலு நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. இதில் வடிவேலுவை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இயக்குநர் ஷங்கருடனான பிரச்சினையை வடிவேலு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நடிக்கும் முடிவுக்கு வந்த வடிவேலு, மீண்டும் சம்பளம் அதிகமாக கேட்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து லைகா நிறுவனம் செலவழித்த பணத்தை, வடிவேலுவிடம் வாங்கிக் கொள்ள வேண்டும். ஷங்கர் – சிம்புதேவன் இணை வேறொரு நாயகனுடன் ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ தொடங்குவது எனப் பேசி முடித்துக் கொண்டனர்.

ஆனால், வடிவேலுவோ தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் வடிவேலு மீதான புகார் என்ன ஆனது என்று  தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜே.சதீஷ்குமாரிடம் கேட்டபோது, இந்த நிமிடம் வரை அந்தப் புகார் அப்படியே தான் உள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தவுடன்தான் புதுப்படம் பண்ண முடியும். எந்தப் படத்துக்காகவும், எந்தவொரு தயாரிப்பாளரின் பணத்தையும் வாங்கிக் கொண்டு எந்தவொரு நடிகர் இதுபோன்று செய்தாலும் இந்த நிலை தான்” என்றார்.

மற்றொரு ஆலோசனைக் குழு உறுப்பினரான டி.சிவா, “எதுவுமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்தப் படத்துக்கு வடிவேலுவால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை அவர் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதனால் எந்தவொரு தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வரவில்லை. இனிமேல் முன்வரவும் மாட்டார்கள். வடிவேலு செய்திருப்பது மிகப்பெரிய தவறு” என்றார்.

LEAVE A REPLY