நம் நாட்டின் சுதந்திர தினத்தை வரலாறாக மாற்ற தலைவர்களும், தியாகிகளும் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இருகை தட்டினால் தான் ஓசை. அது போல் ஒருவர் மட்டுமே சுதந்திரம் என்று கத்தினால் அது உளறல். ஓட்டு மொத்த மக்களும் நின்று சுதந்திரம் என்று கத்தியதால் அது சுதந்திர கோஷமானது. நமது தாய்மண்ணில் பிறந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பிய நமது தேசிய தலைவர்களையும், போராட்ட வீரர்களையும் அவ்வளவு எளிதாக மறந்து விடக் கூடாது.

 

 1947 ஆகஸ்ட் 15 வரலாறாக மாறிய அந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது.  சுதந்திர காற்றை சுவாசிக்க  எத்தனையோ தலைவர்களின்  உயிர்கள் மண்ணில் புதைந்தன. சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அவர்கள் செய்த தியாகங்களை என்றுமே மறந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் இதை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

“வெள்ளிப் பனிமலையில் மீதுலவு வோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்’.

 

LEAVE A REPLY