‘வாழ்க்கை மிக கடினம்’ சொல்லுது குட்டி கரடி… கலக்கல் வீடியோ…

177

வாழ்க்கை மிக கடினமானது என்றாலும், முயற்சியை ஒருவர் கையில் எடுத்து விட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை’ என்ற மாவீரன் அலெக்ஸாண்டர் கூறிய வரிகளை நிரூபிக்கும் ஒரு குட்டிக்கரடியின் வீடியோ இணைய தளத்தை கலக்கி வருகிறது

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்ட்ரோம் ஹன்ட்லி (Storm Huntley) என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர், ஒரு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பதிவிட்ட  சில மணி நேரங்களில், 10 மில்லியன் பேர் அதைப் பார்த்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

அந்த வீடியோவில், ஒரு குட்டிக்கரடி தன் தாயுடன் பனி மலையில் ஏற முயல்கிறது. தாய்க் கரடி மிகவும் சாதாரணமாக மலையில் ஏறி விடுகிறது. ஆனால், அதன் பின்னால் வந்த குட்டிக்கரடி, மலை ஏற முயற்சி செய்து, தொடர்ந்து தவறி விழுந்து கொண்டேயிருக்கிறது. மலை மேலே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கிறது தாய்க் கரடி. குட்டிக்கரடி 300 அடி உள்ள மலையின் கீழ் வரை சென்று சற்றும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் ஏற முயல்கிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும், தாங்கள் அமர்ந்திருக்கும் சீட்டின் நுனிக்கு செல்வார்கள். ஆனால், தன்னம்பிக்கையை இழக்காத அந்த குட்டிக்கரடி, இறுதியில் மலையைக் கடந்து தன் தாயிடம் சேர்கிறது. இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

LEAVE A REPLY