நாயுடுவுக்கு அடுத்து நாளை மம்தா டெல்லியில் போராட்டம்

63

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சிபிஐ அழைத்தது.  அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக மறுத்தார். இதையடுத்து சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் அவரை கைது செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த  முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் 3 நாள் தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய அரசு தூண்டியதால் சிபிஐ இப்படி நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில்  சுப்ரீம் கோர்ட் சிபிஐ விசாரணைக்கு  ராஜீவ்குமார் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து மம்தா போராட்டத்தை கை விட்டார். பின்னர் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதனால் மீண்டும் ஆவேசமடைந்துள்ள மம்தா மீண்டும் தர்ணா போராட்டம் தொடங்குகிறார். இம்முறை அவர் தனது போராட்ட களத்தை டெல்லிக்கு மாற்றியிருக்கிறார். டெல்லியில் நாளை அவர் தர்ணா போராட்டம் தொடங்குகிறார். பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை முடிவடையும் நிலையில் மம்தா போராட்டத்தை தொடங்கி இருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY