மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

103

ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டத்தில் வழக்கமான அல்லது பிடித்தமற்ற வேலை மன அமைதியை குலைக்கிறது. சிலரால் இவற்றை சகித்துக் கொள்ள இயலாததால் இவ்வாறு நிகழ்கிறது. இதனால் வெறுப்பூட்டும் உணர்வு எழுகிறது. 

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இலக்குகள், ஆசைகள் இருக்கிறது. கடும் உழைப்பு, நேர்மை இருந்தும் அது கைகூடுவதில்லை. அல்லது அது நீண்டு கொண்டே போகலாம். ஆனால் இது போன்ற கடுமையான வாழ்க்கை சூழலை ஒருவரால் உடைத்து வெற்றி பெற முடியும். இதற்கு மனதை அமைதியாக வைத்துக் கொண்டு குறிக்கோளை  நோக்கி பயணிக்க வேண்டும் என்கின்றனர் பெரியோர். இதற்கு மன வலிமை மிக அவசியம், மன அமைதி என்பது நம்மிடம் மட்டுமே உள்ளது. இதற்கு புற காரணிகள் மீது கவனம் செலுத்தாமல் இலக்கை  நோக்கிய பயணம் துணை செய்யும் என்பதே வெற்றியாளர்களின் கருத்தாக உள்ளது. மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY