மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

68

மனிதர்கள் பொதுவாக தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு இடையே எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் ஒரு வகையான மன அமைதியிலேயே வாழுகின்றனர். இதில் குடும்பத்தில் உறவில் திடீரென ஏற்படும் மரண நிகழ்வுகள் அந்த அமைதியை அசைத்து விடுகிறது. எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனது இந்த  மரணத்தை ஏற்க மறுக்கிறது. இதனால் ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பது போல தோன்றுகிறது. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம். அதுவரை மனம் அமைதியை இழந்து தவிக்கிறது. இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் எதார்த்தத்தை உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதே மன அமைதிக்கான வழியாகும். மனசே ரிலாக்ஸ்!


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY