மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

104

மனதை வைத்துக் கொண்டு, கவிஞர்களும் தத்துவ ஞானிகளும் விளையாடியிருக்கிறார்கள். ஆனால் நமக்குத்தான் மனதைக் கையாளத் தெரியவில்லையோ போல! பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பார்கள். இவை அனைத்துக்குமே மனம்தான் காரணம். நம்முடைய மனசுதான் இங்கே பிரதானம்!

‘‘மனசே பூரிச்சுப் போயிருச்சுப்பா’ என்று சொல்லாதவர்கள், இந்த உலகில் இருக்கிறார்களா என்ன? சந்தோஷத்திலும் வெற்றியிலும் நல்லதொரு சம்பவத்திலும் இந்த வார்த்தையை எல்லோருமே உற்சாகமாகச் சொல்லியிருப்போம். அதேபோல் இன்னொரு வார்த்தையையும் எல்லோரும் பயன்படுத்தியிருப்போம். ‘என்னவோ தெரியலை. மனசே பாரமாகி போட்டு அழுத்துது’!

உடலில் மனம் என்று எந்த இடத்திலும் இல்லை என்றாலும். மனம்தான் சிந்தனை. மனம்தான் எண்ணம். மனம்தான் செயல் என்பதெல்லாம் நாம் அறிந்து உணர்ந்த ஒன்றுதான்! மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஓரளவிலான மன அழுத்தம் என்பதே பலூன் மாதிரிதான். எப்போது வேண்டுமானாலும் பெரிதாகி வெடிக்கக் கூடியது தான். பதட்டம் மன அமைதியை பாதிக்கிறது.

மன அமைதிக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதுதான் முதல் வழி.  அடுத்தவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதையே அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக… அன்பு! கொடுக்கல் வாங்கல் என்பதை அன்பில் இருந்தே தொடங்குவோம். மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY