மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

123

ருவரை மற்றவர்களிடத்து அந்நியப்படுத்தும் காரணிகளில் முக்கியமானது கோபம். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். (இது அனைத்து நேரங்களிலும் சரி வருவதில்லை), அவர்களிடம் அதிக நண்பர்கள் இருப்பது சந்தேகமே! அதிகமாகக் கோபம் வரும் நபர்களைப் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்காது அல்லது அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்குப் பிடிக்காது. எதுக்கு வம்பு! கொஞ்சம் விலகியே இருப்போம் என்று இருப்பார்கள்.

சுரணை இல்லாதவர்களுக்குதான் கோபம் வராமல் இருக்கும் என்பார்கள் கோபக்காரர்கள். அதே நேரத்தில் கோபப்படுவதில் அர்த்தம் இருக்க வேண்டும். ஒன்றுமில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் கோபப்படுவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. யோசித்துப் பார்த்தால் இழப்பே அதிகம். யாரிடம் நாம் கோபப்படுகிறோம். நமது கோபத்தை தாங்கிக் கொள்பவர்களிடம் அதிகமாக கோபத்தை காட்டுகிறோம். மற்றவர்களிடம்? இது குறித்து நம்மை நாமே சுயபரிசோதனை செய்து நம்மை மாற்றிக் கொண்டுவிட்டால் மன அமைதி நிரந்தரமே! மனசே ரிலாக்ஸ்!

 

LEAVE A REPLY