மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

0
104

 ஒருவர் மனதளவில் பதட்டமாகிறார் என்றால், அவருக்கு சில மருந்துகளைக் கொடுக்கிறார்கள். அதாவது, மருந்தின் வழியாக ஒருவித ரசாயனம் அவருக்குள் செலுத்தப்படுகிறது. மகிழ்ச்சி, சோகம், பதட்டம், ஏக்கம் என எல்லாமே ஒரு வகையான ரசாயனம்தான். ஒரு மனிதன் தனக்குள் சரியான ரசாயனத் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கென்று ஒரு நாளில் சில நிமிடங்களை ஒதுக்கினால் போதும். அமைதியும் ஆனந்தமும் இயல்பாகவே தோன்றும். தனிமனிதர்கள் அமைதியானவர்களாக உருவாகாத வரையில், கலாச்சாரத்தில் அமைதி இருக்காது. உலகத்தில் அமைதி இருக்காது. தங்களை மாற்றிக் கொள்ளத் தனி மனிதர்கள் தயாராகும்போது, அவர்கள் தொடர்பு கொள்ளும் வெளியுலகிலும் அதே அமைதியை உருவாக்க முடிகிறது.

 உலகின் வலிமை மிகுந்த நாடுகளையெல்லாம் தலைமை தாங்கி வழிநடத்துபவர்கள் தனி மனிதர்கள்தானே. அவர்களில் பலர், மனிதத் தன்மையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், சமூகத்துடனோ, சமயத்துடனோ, தேசத்துடனோ அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனிதத் தன்மையோடு அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்தால், எந்தச் சிக்கலையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். உள்நிலையில் அமைதியில்லாதபோதுதான், எல்லாச் சின்ன விஷயங்களும் பிரமாண்டமான மோதல்களாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. இந்த உலகில் பொறுப்புள்ள இடங்களில் இருப்பவர்களை அமைதி நிறைந்த மனிதர்களாக மலரச் செய்தால், அமைதியை ஒரு கலாசாரமாக உருவாக்குவது காலப் போக்கில் சாத்தியமே! மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

LEAVE A REPLY