பிரான்சில் மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்

29
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் தீர்மானம் நிறைவேறவில்லை. 
இந்நிலையில், பிரான்சில் உள்ள மசூத் அசார் சொத்துக்களை  முடக்குவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்சு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. மசூத் அசாரை ஐரோப்பிய யூனியன் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் பிரான்சு தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY