மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில், பல மாதங்களாக தலைமறைவாக இருந்த  மசூத் அசார் மீண்டும் பாகிஸ்தானில் பகிரங்கமாக நடமாடத் தொடங்கியிருக்கிறான். அண்மையில் மசூத் அசார் பாகிஸ்தானின் பாஹவல்புர் பகுதியில் தீவிரவாதிகள் கூட்டிய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டதாக உளவுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அப்போது தன் ஆதரவாளர்களுடன் பேசிய மசூத் அசார் தாம் இந்தியாவின் துல்லியத் தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதாக வந்த செய்திகளை மறுத்ததுடன், 17 ஆண்டுகளாக மருத்துவமனை பக்கமே போனதில்லை என்றும் தெரிவித்துள்ளான். இதன்மூலம் மசூத் அசார் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. 

Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY