மா. செ கூட்டம்.. உதயநிதிக்காக இடமாற்றம்?

251

வரும் 15 ஆம் தேதி சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில், அண்ணா மன்றத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் வேலுார் தொகுதி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வேலுார் தொகுதிக்கு தி.மு.க., நிர்வாகிகள் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழுவில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக திமுக மா.செ கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் நடத்தப்படுவது நிர்வாகிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் மா.செ கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY