முள்ளங்கி, காலிஃப்ளவர் போன்ற காய்களில் உள்ள இலைகளைப் பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சுவையாக இருக்கும். சூப் செய்தும் சாப்பிடலாம்.

பிஸ்கட்டுகள் நமர்த்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரைப் போட்டு மூட்டை போல் கட்டி, பிஸ்கட் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பால் பவுடரைச் சற்று வெதுவெதுப்பான நீர் விட்டுக் குழைத்து, நான்கு வித பழங்களை நறுக்கி, இத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்தால் சுவையான மில்க் ஃப்ரூட் சாலட் தயார்.

ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து வடை போன்று தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.

சமையல் செய்யும் போது கையில் சூடு பட்டுவிட்டால் பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவினால் விரைவில் குணமாகும்.

புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் வராது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY