எம்எல்ஏ அறையில் ரெய்டு.. அமைச்சர் உதயகுமாருக்கு சம்மன்

85

லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனால் வாக்காளர்களின் ஓட்டுக்களை வளைக்க, அரசியல் கட்சியினர், பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் பணம் பிரிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் அதிரடி சோதனை நடந்தது. ‘பி பிளாக்’கில் உள்ள, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனை நடந்தது. இந்நிலையில் அமைச்சரின் அறையில் இருந்த பைகளில் சில துண்டு சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு அவர் தேர்தல் முடிந்த பிறகே ஆஜராவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

LEAVE A REPLY