பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது டுவிட்டர் பக்கத்தை 4 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடியை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் முதல் 4 தலைவர்கள் : (1) இந்திய பிரதமர் மோடி: 1,48,10,584 பேர், (2) இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ -1.22 கோடி பேர், (3) அமெரிக்க அதிபர் டிரம்ப் – 1 கோடி பேர், (4) போப் பிரான்சிஸ் -57,31224.

LEAVE A REPLY