மகள் திருமணம்… 6 மாத பரோல் கேட்டு நளினி மனு!

70

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக இருக்கிறார் நளினி. இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள்ளார்.  பரோல் கோரி வேலூர் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாரயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு வரும் ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் அவசரமாக பரோல் தேவை என்றால் உயர்நீதிமன்ற விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY