காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீருடனான தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் பட்டியலில் உருது மொழி படத்துக்கான விருதை ஹமீத் என்ற படம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் தல்ஹா அர்ஹத் ரேஷி எனும் காஷ்மீரைச் சேர்ந்த சிறுவன், முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தான். இந்த சிறுவனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனை அச்சிறுவனுக்கு தெரியப்படுத்த படக் குழுவினர் தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர். 

இது குறித்து அப்படத்தின் இயக்குனர் இஜாஸ் கான் கூறுகையில், ‘சிறுவனையும், அவனது தந்தையையும் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் முடியவில்லை. இது மிகுந்த வேதனையாக உள்ளது. இன்னும் சிறப்பான முயற்சிகள் எடுத்து அந்த சிறுவனிடம் தகவலை கொண்டு சேர்ப்போம்’ என்றார். 

 

LEAVE A REPLY