இந்தியா முழுவதும் சுமார் 635 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பள்ளிகள் கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. தற்போது அந்த பள்ளிகளில் சுமார் 251 வகுப்பாசிரியர் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. navodaya.gov.in. என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் பிப்ரவரி 14. அட்மிட் கார்டை மார்ச் 10ம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வு மார்ச் இறுதியில் நடக்கும்.

காலிப்பணியிடங்கள் – 251.

பிரின்சிபல் – 25.
அசிஸ்டண்ட் கமிஷ்னர் (நிர்வாகம்) – 3.
அசிஸ்டண்ட் – 2.
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் – 3.
முதுநிலை ஆசிரியர்கள் – 218 பணியிடங்கள்.

கல்வித் தகுதி: பிரிசின்பல்: அங்கீகாரம் பெற்ற பல்கலை.யில் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம். பி.எட் அல்லது அதற்கு இணையான கல்வி.

அசிஸ்டண்ட் கமிஷனர் (நிர்வாகம்) – ஏதேனும் ஒரு பட்டம்.

அசிஸ்டண்ட் / கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்: ஏதேனும் ஒரு பட்டம். வேர்ட் ப்ராசசிங் மற்றும் டேட்டா எண்ட்ரியுடன் கூடிய ஓராண்டு பட்டயப் படிப்பு.

போஸ்ட் கிராஜூவேட் ஆசிரியர்: 2 ஆண்டு முதுகலைப் பட்டப் படிப்பு. மெயின் ஸ்ட்ரீம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

LEAVE A REPLY