‘என்ஜிகே’ 2-வது லுக்

101

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்ஜிகே’ படத்தின் 2-வது லுக் வெளியானது. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய்பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் ஆகியோர் நடிக்கின்றனர். அரசியல் பின்னணியுடன் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பின் போது செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் புதிய படத்தில் சூர்யா நடிக்க தொடங்கினார். பின்னர் செல்வராகவன் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவே என்ஜிகே படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு இம்மாதத்துடன் நிறைவடைகிறது.

என்ஜிகே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சேகுவாரா போன்று சூர்யா காட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ட்ரீம் வாரியார்ஸ் பிச்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு.

LEAVE A REPLY