லண்டனில் தொழிலை மாற்றிய நிரவ்மோடி

70

மும்பை வைர வியாபாரி நிரவ்மோடி, அவரது உறவனர் மெகுல்கோக்சி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்தனர். பின்னர் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை இந்தியா கொண்டு வர  சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. சமீபத்தில் நீரவ்மோடி லண்டனில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆக்ஸ்போர்டு தெருவில் 33 மாடி குடியிருப்பில் 3 படுக்கை கொண்ட வீட்டை வாங்கி தங்கியிருக்கிறார்.

அவர் லண்டனுக்கு எப்படி வந்தார், தங்க எப்படி அனுமதி கிடைத்தது என்பது குறித்து தற்போது தெரிய வந்திருக்கிறது. லண்டனில் தொழில் செய்ய, படிக்க, வேலை செய்ய சிறப்பு விசா வழங்கப்படுகிறது. இதில் தொழில் செய்ய ஒருவர்  ரூ.16 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதற்கு கோல்டன் விசா வழங்கப்படும். அதன்படி நிரவ்மோடி விசா பெற்றுள்ளார். கைக்கடிகாரம் மற்றும் நகைகள் விற்பனை செய்வதாக கூறி இந்த முதலீடை செய்திருக்கிறார். 
 இந்தியாவில் இருந்து தப்பி ஓடுவதற்கு முன்பே இந்த விசாவை பெற்றிருக்கிறார். இதன்படி அவர் 5 ஆண்டுகள் லண்டனில் தங்கி இருக்க முடியும். முதலீட்டை மேலும் அதிகரித்தால் அவர் நிரந்தரமாக தங்குவதற்கு விசா வழங்கப்படும். இந்த விசா அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்படுவதற்கு முன்பே பெற்றதாகும். எனவே அவர் 5 ஆண்டு லண்டனில் தங்குவதற்கு எந்த சிக்கலும் ஏற்படாது. அதே நேரத்தில் அவர் லண்டனில் இருந்து வேறு நாடுகளுக்கு சட்ட ரீதியாக பயணம் செய்ய முடியாது. ஆனாலும் பிரிட்டன் சட்டத்தின்படி இந்தியா அணுகி அவரை இந்தியா கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

LEAVE A REPLY