திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் சசி தரூர். இவர், அங்கு தம்பானூரில் உள்ல கந்தாரி அம்மன் கோயிலில் நேற்று எடைக்கு எடை வாழைப்பழம் கொடுக்க வந்தார். அப்போது துலாபார தராசில் அவர் அமர்ந்தபோது தராசு அறுந்து விழுந்தது. இதில் சசிதரூரின் தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரை பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமான நிர்மலா சீத்தாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து சசிதரூர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது; என்னை நிர்மலா சீத்தாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். இது இந்திய அரசியலில் அரிதான நற்பண்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY