“பட்டங்கள் ஆள்வதும்”… நிர்மலாவுக்கு ப.சி. பாராட்டு!

192

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது “யானை புக்க புலம்போல” என்ற புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா “இயற்றலும், ஈட்டலும்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து பேசுகையில், 

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி’ 

என்ற பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி, முதல் பெண் நிதி அமைச்சராக, அதுவும் தமிழராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக நிர்மலா சீதாராமனை பாராட்டினார். மேலும் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்காக மட்டும் நான் வருத்தமாக இல்லை. நம் நாட்டில் ஜனநாயகம் தினமும் அடிவாங்கிக் கொண்டிருப்பதற்காகவும்தான் வருத்தப்படுகிறேன். 62,907 கலாசி காலிப் பணியிடங்களுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4,19,137 பேர் பி.டெக் படித்தவர்கள், 40,751 பேர் எம்.இ படித்தவர்கள். இதற்காக நான் நிர்மலா சீதாராமனை குறை கூறவில்லை. ஆனால், இந்தியாவின் நிலை தற்போது இதுதான்.  இவ்வாறு அவர்  பேசினார். 

LEAVE A REPLY